
திருக்கோயிலின் சிறப்பு
செங்கல்பட்டு செம்மலை முருகன் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. அந்நிய படையெடுப்பால் முற்றிலும் சிதைந்து போன நிலையில் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பெரியவரின் கனவில் முருகனே வந்து மீண்டும் எனக்கொரு ஆலயத்தை எழுப்பவேண்டும் என்றும் அப்படி எழுப்பிட இப்பகுதி மக்களுக்கு அருளுகிறேன் என்று சொல்லி முருகன் மறைந்தருளினார்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை போக்கி அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறினை அளித்த இம்மலையில் இன்றும் இரவு நேரத்தில் சித்தர்கள் தவத்தில் அமர்ந்து மகிழ்ந்ததாலும் ஞானமும் யோகமும் இம்மலையில் கை கூடுவதால் அருள் ஞான பீட மலை என்று வழங்கப்படுகிறது.