செம்மலை ஸ்ரீ வேல் முருகன் அருள் ஞான பீடம் மலைக்கோயில்

செங்கல்பட்டு, தமிழ்நாடு.

சிறப்பு பிரார்த்தனை

படிப்பில் மேன்மை பெறவும் பண்பில் சீர்மை பெறவும் அன்பால் அணைத்தும் பெறவும் ஒவ்வொரு வளர்பிறை சஷ்டி தினத்திலும் காலையில் டீ, காபி அருந்தாமல் வந்ததும் முருகன் வேலினால் நாவில் திருமந்திரம் எழுதப்படுகிறது.

நாவில் திரு மந்திரம் எழுதியதால் பேசமுடியாமல் இருந்த குழந்தை முருகன் அருளால் பேசிய அதிசயம் இங்கு நடந்தது. திருமண தடை உள்ளவர்கள் இம்மலைக்கு ஒன்பது வாரம் தொடர்ச்சியாக வந்து சென்றபின் திருமணம் நடைபெற்று உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டி இத்திருக்கோவிலுக்கு வந்து ஒன்பது வாரம் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வாரம் மூன்று நெய் தீபங்கள் என 27 நெய் தீபங்கள் ஏற்றி செம்மலையான் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளார்கள்.