செம்மலை ஸ்ரீ வேல் முருகன் அருள் ஞான பீடம் மலைக்கோயில்

செங்கல்பட்டு, தமிழ்நாடு.

கோயில் அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மையப்புள்ளியாய் விளங்குவது செங்கல்பட்டு. அதில் மும்மலை என்ற மலையில் ஓர் பகுதிதான் செம்மலை. இப்பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலின் அருகாமையிலும் அறிஞர் அண்ணா உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் ஸ்ரீராம பாளையத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் அடிபணிந்து பத்தடி வைத்து படிக்கடந்தால் செம்மை வாழ்வு தருவதற்கு சிரித்த முகத்தோட்டு அமர்ந்த செம்மலையானை தம்பதி சமேதராய்க் காணலாம். இம்மலை மும்மலை என்று வழங்குவதற்கு சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் மலை உருவில் அமர்ந்தததால் இம்மலை மும்மலை என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. மேலும் மகேந்திர வர்ம பல்லவன் மற்றும் அவனின் வழித்தேன்றல்கள் மலையேற்றத்திற்கான பயிற்சியையும், வாள்வீச்சு, மல்யுத்த பயிற்சிகளையும் இம்மும்மலையில் செய்ததாக செவி வழி செய்தி சொல்கிறது.